குழந்தை அழுததால் விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு!

குழந்தை அழுததற்காக இரு இந்தியக் குடும்பங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக British Airways நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் கடந்த மாதம் 23 ஆம் திகதி லண்டனில் இருந்து பெர்லினுக்கு பிரித்தானிய விமானத்தில் பயணம் சென்றார்.

ஓடுதளத்தில் பயணித்த போது தமது 3 வயது மகன் தனி இருக்கையில் அமராமல் அழுததால், தமது மனைவி அவரத் தூக்கி வைத்ததைக் கண்டு விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மிரட்டியதோடு, விமானத்தை மீண்டும் முனையத்துக்குத் திருப்பி தங்களை இறக்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு இந்தியக் குடும்பம் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்த காரணத்தால் இறக்கிவிட்டு, இனப் பாகுபாட்டை சுட்டிக் காட்டுவது போல் வசைபாடியதாக, விமானப் போக்குவத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள British Airways நிறுவனம் தாங்கள் ஒருபோதும் பாகுபாட்டை ஊக்குவித்ததில்லை என்றும், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !