குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் (காணொளி)

பிரான்சில் அடுக்குமாடிக்கட்டடத்தில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் உயிரைக் காப்பற்றிய இளைஞருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குறித்த இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள அடுக்குமாடியொன்றில் குழந்தையொன்று ஆபத்தானநிலையில் தொங்கிக்கொண்டிருந்தது.

இதன்போது அந்த இடத்தில் கூடியிருந்தவர்களில் mamoudou gassama எனும் 22 வயதான இளைஞர் மிகவும் தைரியமாகவும் வேகமாவும் 30 வினாடிகளில் வித்தியாசமாக அந்த அடுக்குமாடியில் ஏறி குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

குறித்த இந்த சம்பவத்தினை அங்கிருந்தவர்கள் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியதனால் அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !