குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் couches இல் அபாயகரமான இரசாயனங்கள்

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் nappies இல் அபாயகரமான இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவற்றில் சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான, மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, glyphosate உள்ளிட்ட இரசாயனங்கள் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரசாயனங்கள், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனால் குழந்தைகளின் நலனுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சரான Agnès Buzyn, தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதாரம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், nappies தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !