குற்றச்சாட்டிலிருந்து பின்வாங்கினார் சின்மயி

பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் இலங்கைப் பெண் முறைப்பாடுசெய்ததாக கூறிய விடயத்திலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது இலங்கை பெண் புகார் கூறியதாக சின்மயி டுவிட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் பின்னர் அது உண்மையல்ல என்று தெரியவந்தது. தற்போது சின்மயி அப்படியே இந்த விஷயத்திலிருந்து பின்வாங்கியுள்ளார்.

“அந்த பெண் வேண்டுமானால் ஊடகங்களிடம் இது குறித்து தெரிவிக்கட்டும். நான் இனி ஆதரிக்க மாட்டேன்” என தனது டுவிட்டரில் நேற்று (சனிக்கிழமை) கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை வைரமுத்து மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !