குப்பைக்குள் இருந்த 25 கிலோ தங்கம்

சுவிட்சர்லாந்து நாட்டில் குப்பை தொட்டியில் இருந்து 25 கிலோ தங்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரிச் மாகாணத்தில் குப்பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்தபோதே இந்த தங்கங்கள் கிடைத்துள்ளன.

சூரிச் மாகாணத்தில் மட்டும் கடந்த 2016-ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் மீண்டும் ஆராய்ப்பட்டு இதிலிருந்து 43,000 டன் எடையுள்ள உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

பின்னர், இந்த உலோகங்கள் Hinwil நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆலையில் மீண்டும் தனித்தனி உலோகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரித்தபோது 4,000 டன் எடையுள்ள இரும்பு, அலுமினியம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், இதிலிருந்து அதிநவீன இயந்திரம் மூலம் தனித்தனியாக பிரித்தெடுத்தபோது 25 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளதாக துப்புரவு பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !