குப்பைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல்  நேற்று  நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவிற்கமைய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

  • எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தினாலும் அமுல்படுத்தப்படும் மற்றும் இயக்கப்படும் கழிவகற்றல், சேகரித்தல், கொண்டுசெல்லல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், பதப்படுத்தல், வேறுபிரித்தல், அகற்றுதல் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அதற்கு சமமான கருமங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்குள் உள்ளடங்கும்.
  • ஒரு நபருக்கு அல்லது உடைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதோ, அவதூறு ஏற்படுத்துவதோ, கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதோ, தாமதப்படுத்துவதோ குற்றச்செயலாகக் கருதப்படும். கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை தூண்டுவதும், அதற்குரிய சேவைகளை நடத்துவதற்கு தடை போடுவதும், அத்தகைய தொழிலில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பதும் கூட சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தப்படும்.
  • இந்த சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாக இனங்காணப்படும் எவரையும் பிடிவிறாந்து இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ளது. குற்றவாளியாக இனங்காணப்படும் நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !