குடியேற்றவாசிகள் மீதான புதிய சீர்திருத்தம்: பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்த முன்மொழிவுக்குக் கண்டனம் தெரிவித்து, பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தலைநகர் பரிஸில் நேற்று (புதன்கிழமை) ஒன்றுகூடிய அரசசார்பற்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளும், புதிய சீர்திருத்த முன்மொழிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மீதான புதிய சீர்திருத்தமொன்றை நேற்றுமுன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, பிரான்ஸிலுள்ள உட்துறை அமைச்சு முன்வைத்தது.

பிரான்ஸில் குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கைச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில், புதிய சீர்திருத்தத்தில் முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. புகலிடம் கோரும் கால அவகாசத்தைக் குறைத்தல், எல்லையைக் கடக்கும் நடவடிக்கையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி அபராதத்துடன் ஒருவருட சிறைத்தண்டனை வழங்குதல் உள்ளிட்டவை புதிய சீர்திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரான்ஸில் கடந்த 2017ஆம் ஆண்டில் புகலிடக் கோரிக்கைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !