Main Menu

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி  கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக பா.ஜ.க தரப்பில் பிரசார பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து குறித்த சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வர்த்தமானி வெளியிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.