Main Menu

கிளிநொச்சி மாவட்டத்தையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி

கிளிநொச்சி மாவட்டத்தையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி தொடர்பில் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெட்டுக்கிளியின் தாக்கம் வடக்கிலும் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வெட்டுக்கிளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே குறித்த வெட்டுக்கிளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த வெட்டுக்கிளி போன்று பல குறித்த பகுதியில் காணப்படுவதாகவும், விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சில வெட்டுக்கிளிகள் பறந்து சென்றதாகவும், மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் ஒன்றை தான் பிடித்துள்ளதாகவும் விவசாயி தெரிவிக்கின்றார்.

எனினும் இது போன்று படையெடுக்கும் சாத்தியம் ஏற்படின் பாரிய சவால்களிற்கு விவசாயிகள் முகம் கொடுக்க நேரிடும் எனவும், அதற்கு முகம் கொடுக்கும் வகையிலும், பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் குறித்த வெட்டுக்கிளிகள் சில அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...
0Shares