கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்; இராணுவத்தினர் பாதுகாப்பு
இராணுவத்தின் பாதுகாப்புடன் தேர் ஏறி வீதி உலா வந்தார் கிளிநொச்சி நகர பிள்ளையார். நகர பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இன்று தேர் திருவிழா காலை ஒன்பது மணிக்கு பிள்யைார் தேர் ஏறி வீதி உலா வந்த போது இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இராணுவத்தின் பவல் வாகனம் ஒன்றும், ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.