கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.