கிறிஸ்மஸ்சையும் பொருட்படுத்தாது தொடரும் போராட்டம்: இருபதாவது நாளாகவும் போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், இருபதாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயிருந்தன.
இந்தநிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னமும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று (செவ்வாய்க்கிழமை) 3 bis, 5, 6, 7 bis, 12 மற்றும் 13 ஆகிய வழிச் சேவைகள் முற்றாக தடைப்படுகின்றன. எனினும், மெற்றோக்களில் 1ஆம், 14ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.Ligne 2 : மூன்றில் ஒன்று, Ligne 3 : நான்கில் ஒன்று, Ligne 4 : மூன்றில் ஒன்று, Ligne 7 : மூன்றில் ஒன்று (பல்வேறு நிலையங்கள் மூடப்படுகின்றன), Ligne 8 : மூன்றில் ஒன்று, Ligne 9 : இரண்டில் ஒன்று, Ligne 10 : மூன்றில் ஒன்று (பல்வேறு நிலையங்கள் மூடப்படுகின்றன), Ligne 11 : நான்கில் ஒன்று (நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிலையங்கள் மூடப்படுகின்றன)
போராட்டத்திற்கு பின்னர், இதுவரை 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. இதற்கிடையில் போராட்டத்தை கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு இடைநிறுத்தம் செய்யுமாறு தேசிய ரயில்வே நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தது.
எனினும் அதனை செவிமடுக்காது ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, தேசிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்ததற்கு அமைய, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.