கிரேக்க ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்!

கிரேக்கத்தில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

பொதுத் துறையில் பணியமர்த்தல் நடைமுறைகளை மாற்றுவதற்கான அரசாங்கத் திட்டங்களுக்கு எதிராக நேற்று (வௌ்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய எதென்ஸ் பகுதியில் கூடிய சுமார் 2000 பேர் வரை பதாதைகளை ஏந்தியவண்ணம் கல்வியமைச்சின் புதிய பிரேரணைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்றனர்.

தற்போது பொது ஆலோசனையின் கீழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை கல்வி அமைச்சின் புதிய பிரேரணை மாற்றியமைக்கும் அத்துடன் பல ஆண்டுகள் சேவை அனுபவத்தை விட தகுதிகள் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக கடமை புரிபவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !