கிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்
கிரீஸிலிருந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் விமானம் இன்று ஜப்பானின் மியாகி (Miyagi) நகரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 121 நாள்கள் அது ஜப்பான் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.
உலக அளவில் COVID-19 கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
என்றாலும், ஜூலை 24 லிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.
உலகம் முழுவதும் நெருக்கடி நிலவும் சூழலில், போட்டிகளை நடத்துவது வீரர்களை மட்டுமின்றி மக்களையும் அவமதிக்கும் செயல் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்ற உறுப்பினர் Hayley Wickenheiser கூறினார்.