கியூப விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு!

கியூபாவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டமையினாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் ஹொலன்ட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 சுற்றுலாப்பயணிகளும், 18 கியூப பிரஜைகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில்  விபத்துக் குறித்து விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !