கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தல்!
இரண்டு உயர்நிலைப் பாடசாலைகளில் மூன்று கொவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமையில் உள்ளனர் என்று உள்ளூர் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மேத்யூ போவின் கூறுகையில், ‘பாலிவலண்டே டி சார்லஸ்பர்க்கில் இரண்டு நேர்மறை கொவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஒரு பாதிப்பு ஈக்கோல் ஜீன்-டி-ப்ரீபூப்பில் உறுதி செய்யப்பட்டது. ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு இரு பாடசாலைகளிலிருந்தும் 81 மாணவர்கள் தனிமைப்படுத்துமாறு கூறப்பட்டனர்.
மூவருக்கும் பாடசாலைக்கு வெளியே கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சமூக பாதிப்புகளாக கருதப்படுகிறார்கள்’ என கூறினார்.
கடந்த வாரம் பெரும்பாலான பிரெஞ்சு மொழி பாடசாலைகள் மீண்டும் தொடங்கிய பின்னர், கியூபெக் முழுவதும் ஒரு சில பாடசாலைகளில் கொவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.