கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை நடவடிக்கை
உலகின் மிகப்பெரிய இரட்டையர் ஒன்று கூடலை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் 2020 ஜனவரி மாதத்தில், இந்தக் கின்னஸ் சாதனையைப் படைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ஸ்ரீ லங்கா ட்வின்ஸ் (Sri Lanka Twin) என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்தச் சாதனை நிகழ்வு இடமபெறவுள்ளதாக இலங்கை இரட்டையர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த சம்மேளனத்தின் நிறுவனரும் தலைவியுமான உபுலி கமகேயினால், இலங்கை இரட்டையர் சம்மேளனத்தின் அழைப்பிதழ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.