கிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி
ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் லோகேஸ் ராஹூல் 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
அவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.