காஸா எல்லைக்குள் வர்த்தக பொருட்களை அனுமதித்த இஸ்ரேல்!

இஸ்ரேல் மீண்டும் காஸா எல்லைக்குள் வர்த்தக பொருட்களை இன்று (புதன்கிழமை) அனுமதித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட கால யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் எகிப்து மத்தியஸ்தம் வகிப்பதன் ஒரு அறிகுறியாக இது அமைந்துள்ளது.

பாலஸ்தீனிய குடியேற்றத்தின் மேலாதிக்க ஆயுதக் குழுவாக ஹமாஸ் திகழ்கின்றது. ஆனால், இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய குழுவிற்கும் இடையிலான ஒரு உடன்படிக்கை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.  ஆனால், ஹமாஸ் தனது ராக்கெட் ஆயுதங்களை கட்டியெழுப்ப போராடுவதன் மூலம் எந்தவிதமான விடுதலையும் பெற முடியும் என எதிர்பார்க்க முடியாது.

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான கெரம் சலாம் வர்த்தக கடவையில், பெருந்தொகையான பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள், எரிபொருள்கள், கட்டிட தயாரிப்பு பொருட்கள் என்பன கொண்டு செல்லப்பட்டுள்ளன. சுமார் 2 மில்லியன் மக்களுக்காக இந்த பொருட்கள் இன்று காலை கொண்டு செல்லப்பட்டதாக அங்கு நிலைகொண்டுள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, காஸாவின் மீன்பிடி வலயத்தையும் இஸ்ரேல் விஸ்தரித்துள்ளது. தெற்கு கடற்கரையிலிருந்து 3 முதல் 9 வரையான கடல் மைல்கள் மற்றும் வடக்கில் ஆறு கடல் மைல்கள் வரை இஸ்ரேல் கடற்படை முற்றுகைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடலாம் என்று காசாவின் மீனவர் சங்கத்தின் தலைவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !