காஸாவில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தகவல்!
காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தொண்டு அமைப்பு இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
காஸாவில் 366 சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதற்கமைய மோதல் ஆரம்பித்தது முதல் காஸாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து வருகின்றனர்.
ஒரு வாரத்தில் காஸாவில் சுமார் 60 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.