காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்: அசாதுதின் ஓவைசி

இந்தியாவின் ஒரு அங்கமே ஜம்மு காஷ்மீராகும். ஆகையால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித்தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதாராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அசாதுதின் ஓவைசி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“காஷ்மீர் இந்தியாவுக்கு உரிய பகுதியாகும். ஆகையால் பாகிஸ்தான் இவ்விடயத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இதேவேளை காஷ்மீர் விவகாரத்தில் தனியான கொள்கையொன்று இருக்க வேண்டும். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும்  காஷ்மீர் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மேலும் காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான கொள்கைகளோ, தொலைநோக்குப் பார்வைகளோ இக்கட்சிகளிடம் இல்லை.

அந்தவகையில் காஷ்மீர் விவகாரத்தை ஜேம்ஸ் பாண்ட் மனோபாவத்தில் கையாளாமல் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்” என அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !