காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: கும்பமேளாவில் பாதுகாப்பு தீவிரம்!

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசம் – பிரயாக்ராஜிலுள்ள கும்பமேளாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலினால் 44க்கும் மேற்பட்ட படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தற்கொலை தாக்குதல் நடத்திய சந்தேகபர்  வெளியிட்டுள்ள காணொளியில், “என்னை போல மேலும் பல இளைஞர்கள் இவ்வாறு தாக்குதலை நடத்துவதற்கு தயாராக உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், பிரயாக்ராஜிலுள்ள கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு நாள்தோறும் அதிகளவான பக்தர்கள் வருகை தருகின்றமையால், அப்பகுதியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கும்பமேளாவின் பிரதான பகுதிகள் அனைத்திலும் படைவீரர்கள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !