காவிரிக்காக பலர் போராடினாலும் தீர்வை பெற்று தந்தது அதிமுக – முதல்வர் பழனிசாமி பேச்சு

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசின் நடவடிக்கையால் வெற்றி கிடைத்துள்ளது. காவிரி நீருக்காக போராடியது பலராக இருந்தாலும் தீர்வை பெற்று தந்தது அதிமுகதான்.
காவிரி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டு நாடகமாடியது திமுகதான். காவிரி விவகாரத்தில் போட்ட வழக்கை சுயநலத்துக்காக திமுக திரும்பப்பெற்றது. திமுகவும், கருணாநிதியும் தமிழகத்திற்கு துரோகம் செய்தனர்.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா. இறுதி மூச்சுவரை விவசாயிகளுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம்
திமுகவின் அலட்சியத்தால் 2007இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, கேரளா வழக்கு தொடர்ந்தது. திமுகவின் செயல்படாத தலைவராக இருக்கும் ஸ்டாலின் அதிமுக அரசு செயல்படவில்லை என கூறுகிறார்.
இவ்வாறு முதல்வர் பேசி வருகிறார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !