“காவியக் கவியோகி தாகூர்”
இந்தியாவில் கல்கத்தாவில் பிறந்து
இலக்கியத்தின் மீது தீராக்காதலோடு
இசை கல்வி கவிதையென உலாவந்து
இந்திய தேசீயகீதத்தையும் வங்க தேசீயகீதத்தையும் இயற்றி
இயற்கையை நேசித்த தேசீயக்கவிஞர் தாகூரை
இயற்கை காவுகொண்டதே ஆவணித் திங்கள் ஏழிலே !
இலக்கியத்தை நேசித்த மகான்
இயற்கையோடு வாழ்ந்த மனிதன்
கல்வியுலகின் கல்வியாளன்
கலையுலகின் வித்தகன்
தத்துவத்தை விரும்பிய தத்துவஞானி
தேசீயக் கவிஞர் தாகூரே !
மகத்தான காவிய நூல்கள் இசைப்பாடல்கள்
ஆயிரத்திற்கும் மேலான கவிகள் நாடகங்கள்
நாவல்கள் சிறுகதைத் தொகுப்புகளென படைத்து
பாடல்களுக்கு தானே மெட்டுப் போட்டு
பயணக் கட்டுரைகள் ஓவியப் படைப்புக்கள் பலதையும் தந்து
கீதாஞ்சலி எனும் காவியத்தையும் தந்து
அதற்கு நோபல் பரிசையும் வென்று
ஆசியாவிற்கே பெருமை சேர்த்த தாகூர்ஐயாவை
வானம் வசமாக்கியதே ஆவணித்திங்கள் ஏழினிலே !
கவி……ரஜனி அன்ரன் (B.A) 07.08.2021