!!!!.காவியக்கவிஞன்!!!! (பிறந்தநாள் நினைவுக்கவி) – .ரஜனி அன்ரன்….(B.A)
சிறீரங்கம் தந்த கவிச்சுரங்கம்
ஐப்பசித் திங்கள்29 இல் உதித்த தமிழ்ச்சுரங்கம்
காவியங்களை கானமாக்கிய காவியக்கவி
திரையுலகம் கொண்டாடும் திரையிசைக்கவி
நரை விழுந்தாலும் வாலிபம் மாறாத வாலிக்கவி
கரைகாணா ஆழுமையும் ஆர்வமும் கொண்ட கவி !
வாலியின் வைரவரிகள் வர்ணஜாலம் காட்டும்
நறுக்கு வரிகள் நாசூக்காய் சுடும்
அடுக்கு மொழிகள் எடுப்பைக் கொடுக்கும்
ஆங்கில வார்த்தைகள் ஆட்டம் போடவைக்கும்
எதுகையும் மோனையும் எழுத்தையே ஆளும்
எளிமையும் இனிமையும் இளையோடும்
துள்ளலும் தூக்கலும் தூள் கிளப்பும்
வார்த்தை ஜாலங்கள் வர்ணனை செய்யும்
சிலேடையும் சீண்டலும் சிங்காரம் போடும் !
நவரசங்களையும் பிழிந்து
கவிக்கடலில் முக்குளித்து
முத்தான பாடல்களையும் தந்து
மூன்று தலைமுறைகளையும் தாண்டி
பத்தாயிரத்தையும் விஞ்சி கவிகள் படைத்து
எண்பத்தியிரண்டு வயதுவரை எழுதிக் குவித்தாரே
வாலி இல்லாத் திரையுலகம்
காலியாய்க் கிடக்கிறதே இன்று !!
!!!!.காவியக்கவிஞன்!!!! (பிறந்தநாள் நினைவுக்கவி)
கவியாக்கம்….ரஜனி அன்ரன்….(B.A) 29,10,2018