காவல்துறை தலைமையகத்துக்குச் சென்ற புதிய பிரதமர்!

பிரான்சின் புதிய பிரதமர் Édouard Philippe, பதவி ஏற்றதன் பின்னர் உத்தியோக பூர்வமாக தனது பணியினை ஆரம்பித்துள்ளார். நேற்று முதலாவது பணியாக பரிசில் உள்ள காவல்துறையினரின் தலைமையகத்துக்குச் சென்றார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனால், பெரும் பரபரப்புக்கு மத்தியில், நேற்று திங்கட்கிழமை புதிய பிரதமராக Édouard Philippe அறிவிக்கப்பட்டார் பதவியேற்புக்கு பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு, தனது முதலாவது நேர்காணலினை வழங்கியிருந்தார். அதன் பின்னரே காவல்துறை தலைமையகத்துக்குச் சென்றார். தலைமையகத்தில் 24 மணிநேர காவல்துறையினரின் சேவையில் தேவையான வசதிகளை கேட்டறியவும், ‘ நீங்கள் ( காவல்துறையினர்) அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் மிக விழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிவிக்கவும் இங்கு வந்துள்ளேன்!’ என புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இம்மானுவல் மக்ரோன் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவேன் என தெரிவித்திருந்தார். அதே போல், நேற்று தொலைக்காட்சி பேட்டியில் பிரதமர்  Édouard Philippe, ‘பாதுகாப்பு நடவடிக்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது’ என தெரிவித்தார். பேட்டியைத் தொடர்ந்தே அவர் பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குச் சென்றார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !