காவல்துறையினர் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்! – உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!

காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சனிக்கிழமை இரவு, Sarcelles இல் 31 வயதுடைய காவல்துறை அதிகாரி ஒருவர் மூன்று நபர்களை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த துப்பாக்கிச்சூடு பணிக்காக வழங்கப்பட்ட சேவைத் துப்பாக்கியால் இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக அதீத மன அழுத்தத்துக்குள்ளான அதிகாரி இந்த துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் Gérard Collomb தெரிவிக்கும் போது, ‘காவல்துறையினர் தொடர்ந்தும் ஆயுதங்களுடன்தான் இருப்பார்கள். அதில் எந்த சிக்கல்களும் இல்லை!’ என உறுதி செய்துள்ளார்.
நவம்பர் 13, பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பணியில் இல்லாத போதும் ஆயுதங்களை வீட்டில் வைத்திருக்கலாம் என பிரெஞ்சு காவல்துறையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவில் எந்த மாற்றமும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !