காவல்துறையினரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு – மீண்டும் யுத்தத்தை நினைவுபடுத்தும் பளை பிரதேசம்!

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட கச்சார்வெளி பிரதேசத்தில் போக்குவரத்து காவல்துறை வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதையடுத்து அப்பிரதேசமெங்கும் பெருந்தொகையான இராணுவத்தினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் உருவாகியுள்ளது.

பளை, கச்சார்வெளி சந்திப்பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் போக்குவரத்து காவல்துறையினரின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுட்டிக்கப்பட்டதனையடுத்து இச்சம்பவம் மக்கள் மத்தியில் பயத்தினை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், மக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென காவல்துறையினர் ஒலிபெருக்கிமூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !