காலநிலை! – 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
இன்று சனிக்கிழமை பிரான்சின் 16 மாவட்டங்களுக்கு Météo France செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பிராந்தியங்களான இப்பகுதிகள் கடும் புயலினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச பாதிப்பை சந்திக்க உள்ள Pyrénées Atlantique மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை குறித்த மாவட்டத்தில் 70 வயதுடைய நபர் ஒருவர் மோசமான காலநிலையினால் சாவடைந்திருந்தார். பலத்த புயல் காற்று வீசும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் புயலடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, இன்று காலை நிலவரப்படி 25,000 வீடுகள் மின்சாரம் அற்று இருளில் மூழ்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.