காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி

காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது என, சுற்றுச்சூழல் ஆர்வலரான சுவீடன் மாணவியொருவர் (வயது-16) தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக பெல்ஜியம் சிறுவர்கள் தொடர்ந்து ஏழாவது வாரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த மாணவி, காலநிலை மாற்றம் காரணமாக நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது. இந்நிலையில், சூழலை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி மக்களை விழிப்பூட்ட வேண்டும். ஏனெனில் அவர்கள் காலநிலை மாற்றத்தின் நெருக்கடி தொடர்பாக அடிப்படை அறிவையேனும் கொண்டிராதவர்களாக காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

இயற்கை இல்லையெனில் எதிர்காலம் இல்லை என்ற வாசகங்களுடன் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெல்ஜியம் பூராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !