கார்த்திகை 27 !!! கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)
தமிழ்மானம் காத்த நாள்
தன்மான மறவர்களின் நாள்
தாயகக் கனவு நாள்
தேசீயத்தின் உயிர்ப்பு நாள்
தேசப் புதல்வர்களின் நாள்
கார்த்திகை இருபத்தியேழு !
எம் இனத்தின் உயிர்ப்பு நாள்
எம் ஆயுளுக்கும் இருப்பான நாள்
சத்திய வேள்வியின் புனித நாள்
நித்தியமான உத்தமர் நாள்
வரலாற்றின் புனித நாள்
வரலாறாகிய நாள் கார்த்திகை 27 !
காலத்தால் அழியாத காவிய நாள்
காந்தள்கள் பூத்துக் குலுங்கிடும் நாள்
கல்லறை தெய்வங்களுக்கு
ஒளி ஏற்றும் நாள்
மரணித்தும் மகுடம் சூடும் நாள்
மறவர்களின் மகத்தான நாள் கார்த்திகை 27 !
புனிதர்களின் துயிலும் இல்லமெல்லாம்
புனிதமாகும் புனித நாள்
புது நானூறு படைத்த நாள்
பேதம் இன்றியே ஒளியேற்றும் நாள்
ஊரே ஒன்றுகூடித் தொழுதிடும் நாள்
உறவுகள் எல்லாம் ஒன்றுகூடும் நாள்
உன்னதர்களை நினைத்திடும் நாள்
கார்த்திகை இருபத்தியேழு !
விழிகளிலே நீர் சொரிய
விம்மியழுது நெஞ்சம் உருகிடும் நாள்
நினைவுகளும் மலரும் நாள்
கண்ணீரில் கரைந்த நாள்
காவியமான நாள் கார்த்திகை27 !
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 27.11.2018
https://www.youtube.com/watch?v=cHqXxKZLwwo&feature=share