காருக்குள் சிக்குண்டு நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவர்கள் 8முதல் 6வயதிட்குட்பட்டவர்கள் எனவும் துவாரபூடி கிராமத்தை சேர்ந்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர்கள் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சிறுவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து சிறுவர்கள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பகிரவும்...