காதலிக்கு திருமணம் நடந்த மண்டபம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை

சென்னை பெருங்கொளத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்துரு (வயது 28). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த (27) வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இளம் பெண்ணிற்கு வந்தவாசியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2-ந்தேதி வந்தவாசியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது.

காதலிக்கு திருமணம் நடைபெறும் தகவல் சந்துருவுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த சந்துரு வந்தவாசிக்கு சென்றார். அங்கு காதலிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபம் முன்பு உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !