காதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி!

காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 இலட்சம் ரோஜாப்பூக்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா, டுபாய், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் விற்பனையாகவுள்ள ரோஜாவொன்றின் விலை 16 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது.

உள்ளூர் சந்தையில் 20 ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு ஒரு ரோஜாப்பூ 10 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !