காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் அமுலில் இல்லை என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிர்வது குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டியது என அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !