காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் திருமலையில்! – உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், திருகோணமலையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகின்றது.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று காலை சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின. அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் போனோர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், தற்போதைய செயற்பாடுகள் வெறும் கண்துடைப்பென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் சற்று தாமதமாகவே வருகை தந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட அமர்வில், திருமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது கருத்துக்களையும் முறைப்பாடுகளையும் முன்வைத்து வருகின்றனர்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மொஹான் ஜீ பீரிஸ், அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் மக்களின் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !