காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

இச்சந்திப்பில் வடக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்புக்குள் செயற்பட வைப்பது தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை அமைச்சின் ஊடாக திரட்டி அவற்றை ஆவணப்படுத்தும் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பாக அடுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர், உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றத்திற்கு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் குறித்த மன்றத்தின் சார்பில் சுப்பிரமணியம், செ. சபாநாதன், மா. கதிர்காமராஜா உட்பட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !