காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முட்டாள்கள் – சந்திரசேகர ராவ் ஆவேசம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரும் முட்டாள்தனமாகவே செயற்படுவதாக தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பஞ்சாயத்து தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்சம் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து முட்டாள்கள் போன்று கருத்துக்கூறி வருகின்றார்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி நன்கு தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை ஆராய்ந்தால் முட்டாள் தனமாக இருக்கும். அவர்கள் முட்டாள்தனத்தை வெளிக்காட்டுவதால் காங்கிரஸ் தலைவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறோம்.

இதேவேளை சந்திரபாபு நாயுடு இந்தியாவிலேயே மோசமான அரசியல்வாதி. எனது கட்சி எப்போதுமே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஆதரவு தெரிவிக்கும்.

ஆனால் இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அரசியல் காரணங்களுக்காக மாற்றி வருகிறார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !