காங்கிரஸ் அல்லாத கர்நாடகாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம் – யோகி

விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி அங்கு  தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டுவருகின்றனர் அரசியல் கட்சியினர். அதிரடியான குற்றச்சாட்டுகளை தங்களது எதிர் தரப்பினர் மீது அதிரடியாக சுமத்திவருகின்றனர் இரு தரப்பினை சேர்ந்தவர்களும்.

அந்த வகையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சியின் (பாஜக) வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகிறார். நேற்று பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற யோகி, “காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தின் வளர்ச்சியை முடக்க்கிவிட்டதுடன், ஜிகாதி தன்மையுடன் ஆட்சி செய்துவருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ச்சியாக தன்னிச்சையான போக்குடன் ஆட்சி செய்து ஜனநாயக முறைமைகளை சீர்குலைத்துவருகிறார்” என பேசினார். மேலும், “காங்கிரஸ் அல்லாத கர்நாடகத்தினை உருவாக்குவதே தங்களது இலட்சியம்” எனவும் குறிப்பிட்டார் யோகி.

முன்னதாக, யோகி ஆட்சி புரியும் உத்திர பிரதேச மாநிலத்தில் பிஞ்சு குழந்தைகளுக்கு அளிக்க போதிய ஆக்சிஜன் இல்லாமல் சுமார் 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !