கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927

ஆரம்­பத்தில் பழுத்த நாத்­தி­க­வாதி… பிற்­கா­லத்தில் அர்த்­த­முள்ள இந்­து­மதம், யேசு காவியம் வரை எழு­திய ஆத்­தி­க­வாதி…

 இதுதான் கண்­ண­தாசன்.

‘நான் நிரந்­த­ர­மா­னவன் அழி­வ­தில்லை… எந்த நிலை­யிலும் எனக்கு மரணம் இல்லை’ என்ற கவிஞர் கண்­ண­தா­ச­னுக்கு இன்று பிறந்த நாள்…

முன்னைப் பழ­மைக்கும் பின்னைப் புது­மைக்கும் பால­மாக விளங்­கு­வது நமது தொன்­மை­யான தமிழ்­மொழி. காலந்­தோறும் ஆற்றல் மிகு கவி­ஞர்­களும் புல­வர்­களும் எழுத்­தா­ளர்­களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்­துள்­ளனர்.

அவர்­களில் முக்­கி­ய­மான இடம் வகித்து, வெள்­ளித்­தி­ரை­யிலும் மெல்­லிய தமிழை வாழ­வைக்க முடியும் என்று நிரூ­பித்­தவர் கவி­ய­ரசர் கண்­ண­தாசன் ‘கவி­ய­ரசு’ எனப் போற்­றப்­பட்­டவர்.

தமக்­கெனத் தனிப்­பா­ணியை உரு­வாக்கிக் கொண்­டவர். அர­சி­ய­லிலும் ஆன்­மி­கத்­திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்­றங்­க­ளுக்­கேற்ப, அவர் சிந்­தனைப் போக்கில் மாற்­றங்கள் நேர்ந்­தன. அவற்­றை­யொட்டி அவர் கவி­தையும் முரண்­பா­டு­களைக் கண்டு வளர்ந்­தது. தமிழ் வழங்கும் இடங்­களில் எல்லாம் அவரைச் சிறப்­பாகத் திகழ வைத்­தவை அவர் எழு­திய ஆயி­ரக்­க­ணக்­கான திரைப்­பா­டல்­களே.

சிவ­கங்கை மாவட்டம் செட்­டி­நாடு பகு­தியின் சிறு­கூ­டல்­பட்­டியில் பெற்றோர் சாத்­தப்­பனார் – விசா­லாட்­சிக்கு 1927ஆம் ஆண்டு, ஜூன் 24இல் பிறந்­தவர் முத்­தையா, பின்­னாளில் கண்­ண­தாசன் ஆனது சுவா­ரஷ்­ய­மான கதை. அதை அவ­ரது ‘வன­வாசம்’ நூலைப் படித்தால் உண­ரலாம்.

சிறி­கூ­டல்­பட்­டியில் ஆரம்­பக்­கல்வி, அம­ரா­வதி புதூர் உயர்­நி­லைப்­பள்­ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 15 வய­தி­லேயே கவி­தைகள் எழுதத் தொடங்­கி­விட்டார்.

17 வயதில் அவ­ரது முதல் கவிதை வெளி­வந்­தது.

1950ஆம் ஆண்டு கண்­ண­தா­சனின் மண வாழ்க்கை தொடங்­கி­யது. கவி­ஞ­ருக்கு மூன்று மனை­விகள். முதல் மனைவி பெயர் பொன்­ன­ழகி என்­கிற பொன்­னம்மா. இவர்­க­ளுக்கு கண்­ம­ணி­சுப்பு, கலை­வாணன், ராம­சாமி, வெங்­க­டா­சலம் ஆகிய 4 மகன்கள். அல­மேலு, தேனம்மை, விசா­லாட்சி ஆகிய 3 மகள்கள் (விசா­லாட்சி என்­பது கண்­ண­தா­சனின் தாயாரின் பெயர்).

இரண்­டா­வது மனைவி பார்­வ­திக்கு காந்தி கண்­ண­தாசன், கமல், அண்­ணா­துரை, கோபால கிருஷ்ணன், சீனி­வாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்­செல்வி ஆகிய 2 மகள்கள்.

மூன்­றா­வது மனைவி புலவர் வள்­ளி­யம்­மைக்கு, விசாலி மனோ­கரன் என்ற ஒரே மகள்.

கண்­ண­தா­சனின் துணிச்சல் இன்­று­வரை எந்த கவி­ஞ­னுக்கும் ஏன் எந்தப் படைப்­பா­ளிக்கும் இருந்­த­தில்லை. தன் வாழ்க்கை வர­லாற்றை, ஒளிவு மறைவின்றி ‘வன­வாசம்’ என்ற பெயரில் புத்­த­க­மாக எழு­தினார்.

அது அவ­ரு­டைய மறு­பக்­கத்­தையும் படம் பிடித்துக் காட்­டு­கி­றது. தன் குணச்­சித்­தி­ரத்தை இரண்டே வரி­களில் பாட­லாக எழு­தி­யவர்.

‘ஒரு கோப்­பை­யிலே என் குடி­யி­ருப்பு; ஒரு கோல­மயில் என் துணையிருப்பு’ என்­பதே அந்தப் பாடல்.

ஆரம்­பத்தில் இவர் தி.மு.க.வில் இருந்தார். அதன்­பி­றகு அதா­வது 1960-–61 ஆம் ஆண்­டு­களில் தி.மு.க.விலி­ருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்­கிரஸ் கட்­சியில் சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் பகுத்­த­றிவு என்ற போர்­வையில் நடந்த நாத்­திக பிர­சா­ரத்தில் மூழ்­கிய கண்­ண­தாசன், அதன்­பி­றகு ஆத்­திகப் பாதைக்கு திரும்­பினார். ஆரம்ப காலத்து தி.மு.க. தலைவர்களுள் ஒரு­வ­ராக விளங்­கிய கண்­ண­தாசன், அர­சி­யலில் துரோ­கமும் சுய­ந­லமும் கோலோச்­சு­வது கண்டு விரக்­தி­யுற்று அதி­லி­ருந்து வில­கினார். சில காலம் காங்­கிரஸ் ஆத­ர­வா­ள­ராக இருந்த அவர் அர­சியல் தனக்கு ஒத்­து­வ­ராது என்று முற்­றிலும் வில­கினார்.

கண்­ண­தா­சனின் ஆளுமை என்­பது, அவ­ரது சாகா­வரம் பெற்ற இலக்­கி­யங்­களில் தான் நிலை­கொண்­டுள்­ளது. நான்­கா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட கவி­தைகள், ஐயா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட திரைப்­பா­டல்கள், அற்­பு­த­மான துள்­ளு­தமிழ் நடை­யுடன் கூடிய நூல்கள், கட்­டு­ரைகள், சிறு காப்­பி­யங்கள், நவீ­னங்­களை எழு­தி­யது கண்­ண­தா­சனின் சாதனை.

தமிழில் புதிய மறு­ம­லர்ச்­சியை பார­திக்குப் பிறகு ஏற்­ப­டுத்­தி­யவர் கண்­ண­தா­சனே.

இவ­ரது ‘சேரமான் காதலி’ என்ற புதினம் 1980ஆம் ஆண்டு சாஹித்ய அக­டமி விருது பெற்­றது. ‘குழந்­தைக்­காக’ என்ற திரைப்­ப­டத்­திற்கு எழு­திய திரை­வ­ச­னத்­திற்­காக (1961) இவ­ருக்கு தேசிய விருது கிடைத்­தது. திரைப்­பா­டல்­க­ளிலும் செந்­தமிழ் துள்ளி விளை­யா­டு­வது கண்­ண­தா­சனின் சிறப்பு.

பண்­டைய இலக்­கி­யங்­களில் அவ­ருக்கு இருந்த தேர்ச்சி திரைப்­பா­டல்­களில் வெளிப்­பட்­டது. சந்­தமும், செந்­த­மிழும் எந்த சிரமமும் இன்றி கைகோர்த்­தன, கண்­ண­தா­சனின் பாடல்­களில் அவர் ஆசு­க­வி­யா­கவே திகழ்ந்தார்.

அந்தக் காலத்தில் கண்­ண­தா­சனும் எம்.ஜி.ஆரும். பரம எதி­ரிகள் என்­பது பலரும் அறிந்­தது. அப்­படி இருந்தும் தமிழ்­நாட்டின் ‘அர­சவை கவி­ஞ­ராக கண்­ண­தா­சனை எம்.ஜி.ஆர். நிய­மித்தார். தமிழ்­நாட்டில், காங்­கிரஸ் ஆட்­சி­யின்­போது நாமக்கல் கவிஞர் வெ.ராம­லிங்கம் பிள்ளை அர­சவைக் கவி­ஞ­ராக இருந்தார்.

அதன் பிறகு அப்­ப­தவி ரத்து செய்­யப்­பட்­டது. 1977ஆம் ஆண்டு தேர்­தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமி­ழக முதல்­வ­ரானார். அவர் கண்­ண­தா­சனை, 1978ஆம் ஆண்டு ‘அர­சவைக் கவிஞர்’ ஆக நிய­மித்தார்.

அர்த்­த­முள்ள இந்து மதம், வன­வாசம், மாங்­கனி, ஏசு காவியம் ஆகி­யவை கண்­டிப்­பாகப் படிக்­கப்­பட வேண்­டிய நூல்­க­ளாகும். பகவத் கீதைக்கும் அபி­ராமி அந்­தா­திக்கும் சௌந்­தர்யா லக­ரிக்கும் கண்­ண­தாசன் விளக்கம் எழுதி இருக்­கிறார்.

கண்­ண­தா­சனின் தனிப்­பட்ட வாழ்க்கை கட்­டுப்­பா­டற்­றது. மனித பல­வீ­னங்­க­ளுக்கு சாட்­சி­யாக விளங்­கு­வது. அதை அவரே தனது சுய­ச­ரி­தையில் கூறி இருக்­கிறார். ” நான் எப்­படி வாழ்ந்­தேனோ அப்­படி வாழா­தீர்கள்; நான் கூறி­ய­படி வாழுங்கள்” என்­பதே கண்­ண­தா­சனின் சுய­பி­ர­க­டனம்.

தமி­ழ­கத்தில் நாத்­தி­க­வா­தமும் பிரி­வி­னை­வா­தமும் ஆதிக்கம் செலுத்­திய கால­கட்­டத்தில், அதே பிர­சாரக் காலத்­தி­லி­ருந்து விடு­பட்டு, தேசி­யத்­தையும் தெய்­வீ­கத்­தையும் உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்­ண­தா­ச­னு­டை­யது.

மக்­க­ளிடம் வெகு­வாகப் புழங்­கிய திரை­யி­சைப்­பா­டல்­களின் மூலம் தனது கருத்­துக்­களை ஆர்ப்­பாட்­ட­மின்றி அறி­வு­றுத்­திய அவரது தேசிய சேவையை பாராட்­டாமல் இருக்க முடி­யாது.

நூற்­றுக்­க­ணக்­கான பாத்­தி­ரங்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான உணர்­வு­களின் நுட்ப வேறு­பா­டு­களைக் கண்­ண­தாசன் சித்­தி­ரித்­த­து­போல வேறொ­ருவர் சித்­தி­ரித்­த­தில்லை என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

தமிழ்த் திரை­யு­லகின் மறக்க முடி­யாத பாடல்­களை படைத்த கவிஞன் கண்­ண­தாசன். திரைப்­படக் கவி­ஞ­ராக புகழ்­பெற்ற கண்­ண­தாசன் தான் இந்­து­வாக இருந்­தாலும் மத­வேற்­றுமை கரு­தாமல் ஏசு­கா­வியம் பாடி­யவர். கம்­பரின் செய்­யு­ளிலும், பார­தி­யாரின் பாடல்­க­ளிலும் மிகுந்த ஈடு­பாடு கொண்­டவர். பார­தி­யாரை மான­சீகக் குரு­வாகக் கொண்­டவர். பகவத் கீதைக்கு உரை எழு­தி­யுள்­ள­தோடு அபி­ராமி பட்­டரின் அபி­ராமி அந்­தா­திக்கு விளக்­க­வு­ரையும் எழு­தி­யுள்ளார்.

1954ஆம் ஆண்­டு­வரை கவி­ஞ­ரா­கவும், அர­சி­யல்­வா­தி­யா­கவும் மட்­டுமே இருந்த கவிஞர், ‘தென்றல்’ பத்­தி­ரிகை மூலம் தமிழ் மக்­க­ளுக்குப் பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ராக அறி­முகம் ஆனார்.

அர­சி­ய­லுக்கு ஒரு முற்­றுப்­புள்ளி போட்­டவர், சினி­மாத் ­து­றையில் முழு மூச்­சுடன் இறங்­கினார். சொந்­த­மாகப் படம் தயா­ரித்தார். முதல் படம் ‘மாலை­யிட்ட மங்கை’ நல்ல வெற்றியைத் தந்­தது. தொடர்ந்து பல படங்கள். சிவ­கங்கைச் சீமை, கவ­லை­யில்­லாத மனிதன் எல்லாம் தோல்­விகள்.

இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்­பளம் கொடுப்­பவன் முத­லாளி, சம்­பளம் வாங்­கு­பவன் தொழி­லாளி; இதில் நேர்­மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்­சத்­திர மோகம் குறைந்­தால்தான் சினிமாத் தொழில் உருப்­படும்! என்றார் கண்­ண­தாசன்.

இவரே எழு­தி­யதில் இவ­ருக்கு மிகவும் பிடித்த சினி­மாப்­பாடல் – ‘போனால் போகட்டும் போடா!’ என்ற பாடலாம்.

கவிஞர் ஒரு முறை அறிஞர் அண்­ணாவைப் பார்க்க அவ­ரது வீட்­டுக்கு சென்­றி­ருந்­தாராம். அண்ணா மிகவும் சுமா­ரான சட்­டையை அணிந்­தி­ருந்­தாராம். அதை பார்த்த கவிஞர் அண்­ணா­விடம் அந்த சட்­டையை உடனே கழற்றித் தரும்­படிக் கேட்டார்.

அண்­ணாவும் கழற்றித் தர, கவிஞர் “நான் இதை அளவுக்காக எடுத்துச் செல்கிறேன். ஜப்பான் சில்க்கில் ஒரு சட்டை தைத்து எடுத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய் விட்டார். அத்தோடு அந்த விஷயத்தை கவிஞர் மறந்தும் விட்டார்.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார் கவிஞர். அந்த நேரம் பார்த்து அண்ணா மேல் சட்டை எதுவும் அணியாமல் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டு இருந்தார்.

”என்ன அண்ணா வெற்றுடம்போடு இருக்கிறீர்கள்?” என்று கேட்க, அண்ணாவோ, ”ஆமாப்பா போட்டிருந்த சட்டையையும் நீ பிடுங்கிக் கொண்டு போய் விட்டாய்… என்ன செய்வது?” என்றார் குறும்புடன். கவிஞருக்கு அப்போதுதான் உறைத்தது. முதல் வேலையாக கடைக்குப் போய் ஜப்பான் சில்க் சட்டைகளை தைத்து கொண்டு வந்து கொடுத்தாராம்.

இப்படி பலவுண்டு அவரைப் பற்றி சொல்லிக்கொண்டு போக…

திரைப்படப் பாடலாக இருந்தாலும், கவிதையாக இருந்தாலும் கண்ணதாசனின் எந்தப் படைப்பாக இருந்தாலும் அதில் ஒரு யதார்த்தம்…. நமக்கே எழுதியதுபோல ஒரு உணர்வு நிச்சயம் இருக்கும். இதை யாரும் மறுக்கமுடியாது.

பிறப்பின் வரு­வது! யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்­பெனச் சொல்­வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறி­வெனச் சொல்­வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்­பெனப் படு­வது என்­னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்­பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுக­மெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்­பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்­பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்­பது என்­னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்­னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனு­ப­வித்­தேதான் அறி­வது வாழ்க்­கை­யெனில்

ஆண்­ட­வனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்­டவன் சற்றே அருகு நெருங்கி

‘அனு­பவம் என்­பதே நான்தான்’ என்றான்!

Kannadasan ooook

 

 

 

 

 

 

 

 

 

65f92203

 

 

 

 

 

 

 

 

 

 

மெல்லிசை மன்னர் எம்எஸ்வியின் பிறந்த நாள் இன்று!

தமிழ் சினிமா உலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 86 வது பிறந்த தினம் இன்று.1928 ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமத்தில் சுப்பிரமணியன் – நாராயணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எம்.எஸ்.வி. மெல்லிசை மன்னரின் முழுப்பெயர் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன். கேரளாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு, அதே போன்று மனையங்கத் ஹவுஸ் என்பது எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர்.

சிறு வயதில் வறுமை காரணமாக எம்.எஸ்.வியின் தாயார் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்யத் தீர்மானித்து இருவரும் இறக்க இருந்த வேளையில் எம்.எஸ்.வியின் தாத்தா இவர்கள் இருவரையும் காப்பாற்றி கூட்டி வந்தாராம். அன்று எம்.எஸ்.வி இறந்து போயிருந்தால் எவ்வளவு பெரிய இழப்பை இந்த இசையுலகம், திரையுலகம் சந்தித்திருக்கும்!

இசையுலகில் நுழைவதற்கு முன் இசையமைப்பாளராக வருவதற்கு முன்பு ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் மாதம் 3 ரூபாய் சம்பளத்திற்கு ஆபிஸ் பாயாக வேலை செய்து இருக்கிறார் எம்.எஸ்.வி. பின்பு டி.எஸ்.பாலையாவுடன் சேர்ந்து நாடகங்களில் பணியாற்றத் தொடங்கினார்.

முதல் படம் ஜெனோவா

எம்.ஜி.ஆரின் ஜெனோவா படத்திற்கு முதன்முதலில் இசையமைத்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆருக்கு இவர் இசையமைப்பது பிடிக்கவில்லை. ஆனால் எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்களைப் போட்டுக் காட்டியதும் படத்திற்கு எம்.எஸ்.வியே இசையமைக்கட்டும் என்று கூறியதுடன், அவரின் வீடு வரை சென்று பாராட்டி விட்டு வந்தார்.
விஸ்வநாதன்- ராமமூர்த்தி

இசையமைப்பாளர் ராமமூர்த்தியுடன் இணைந்து முதன்முதலில் இசையமைத்த படம் பணம். எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி தொடர்ந்து 700 படங்களுக்கு இருவரும் இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள்.

தனியே தன்னந்தனியே

எம்.எஸ்.வி தனியாக 500 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மொத்தம் 1200 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.

அடுத்த தலைமுறைகளுடன்

இளையராஜா, தேவா, கங்கை அமரன், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பளர்களின் இசையில் பாடல்களைப் பாடி இருக்கிறார்.

கவியரசருடன்.. கவியரசு கண்ணதாசனும்

எம்எஸ்வியும் மிக நெருக்கமானவர்கள். எம்எஸ்வி இசையில் கண்ணதாசனும் வாலியும்தான் அதிகப் பாட்டு எழுதியவர்கள். தனிப்பட்ட முறையிலும் கவியரசரும் இசையரசரும் அத்தனை நட்பாகத் திகழ்ந்தார்கள். கவியரசர் மறைந்த பிறகும், அவரது நினைவைப் போற்றும் வகையில் காதல் மன்னன் படத்தில் கண்ணதாசன் ரசிகராக நடித்திருப்பார் எம்எஸ்வி.

நடிகராக…

சிறுவயதில் நடிகராக வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது, அது நடக்காததால் இசையில் கவனம் செலுத்தினார்.நடிப்பின் மீது இருந்த ஆசையின் காரணமாக படங்களிலும் நடித்து இருக்கிறார். கண்ணகி, காதலா காதலா, காதல் மன்னன் உள்பட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

மெல்லிசை மன்னர்

மெல்லிசை மன்னர், கலைமாமணி உள்பட 16 க்கும் அதிகமான விருதுகளைப் பெற்று உள்ளார் எம்.எஸ்.வி. மெல்லிசை மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…….

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !