கல்வித்தேவைக்கான பண உதவி விபரங்கள்
தமிழ் நாடு சென்னையில் வசிக்கும் எமது வானொலியின் இந்திய செய்தித்தொடர்பாளர் திரு.பாண்டியன் அவர்களின் புதல்வர் அருண்குமார் அவர்கள் தனது சட்டத்துறைக்கல்வியின் , மேல் படிப்பை பிரித்தானியாவில் தொடர்வதற்காக, தனக்கான பண உதவியை (12 100 பவுண்ஸ் / 14 000 யூரோ) எம்மிடம் கோரியிருந்தார் என்பது நேயர்களாகிய நீங்கள் அறிந்ததே.
அதற்கிணங்க எமது வானொலி மூலம் அன்பு நேயர்களாகிய உங்களிடம் உரிமையுடன் இக் கோரிக்கையை முன் வைத்தோம். அதனை ஏற்று பெரும்பாலான அன்புறவுகள் மனிதாபிமானத்தோடு முன் வந்து உங்களால் முடிந்த இன்னுதவியை வழங்கியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்குமே எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
இதுவரை எமக்குக் கிடைத்த பண விபரங்கள் உங்கள் பார்வைக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். இவ்விபரங்கள் தொடர்பில் கருத்துக்கள் இருந்தால் எமது கலையகத்துடன் தொடர்பு கொள்ளவும் (TRT : 01 48 37 16 75) உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நம்பிக்கைக்கும் நெஞ்சார்ந்த நன்றி !
கல்வித்தேவைக்கான பண உதவி செலுத்திய விபரங்கள்