“ கல்விச் செல்வம் “ கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 24,01,2019

கல்வியில் சிறந்த தமிழ்நாடு
கம்பன் பிறந்த தமிழ் நாடென
பாடி வைத்தான் பாரதியும் அன்று
தமிழ்மறையாம் திருக்குறளும்
கல்விச் செல்வத்தின் சிறப்பினை
நான்கு அதிகாரங்களிலும்
நாற்பது குறட்பாக்களிலும்
நயமாய் விளக்கி நிற்கிறதே !

கல்வி எங்கள் செல்வம்
கற்கும் போது கசக்கும்
கற்றபின் கரும்பாய் இனிக்கும்
கற்றுத் தேறினால் சுகமாய் இருக்கும்
சுமைகளைக் குறைக்கும்
சுதந்திர வானிலும் பறக்க வைக்கும் !

அள்ள அள்ளக் குறையாத செல்வம்
அழிக்கவே முடியாத அரும்பெரும் செல்வம்
அழியாப் புகளையும் அள்ளிக் கொடுக்கும்
அறியாமை எனும் இருளகற்றி
ஒளி எனும் அருள் கொடுக்கும்
அறிவுக் கண்ணையும் திறந்திடும்
அட்சய பாத்திரமான கல்விச் செல்வம் !

சிந்தனையைச் செதுக்கும்
விந்தை மிக்க ஆயுதம்
கரை காண முடியாத காவியம்
செல்லும் இடமெல்லாம்
சிறப்பினைத் தந்திடும்
நாட்டையும் வீட்டையும் உயர்த்தும்
உலகத்தையே மாற்றும்
உன்னத சக்தி கல்விச் செல்வம் மட்டுமே !« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !