கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடை!

ஜேர்மனியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது.
North Rhine-Westphalia மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், குறித்த திட்டத்தினை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகைபிடிப்பது பொறுப்பற்ற செயல் எனவும் North Rhine-Westphalia மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வயிற்றிலிருக்கும் குழந்தைகளும், சிறுவர்களும் புகைப்பதால் மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியாது, எனவேதான் இந்த புகை பிடிக்க தடையை கொண்டு வர உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.