கர்நாடகா விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி- சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10பேர், காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றிருந்தனர்.
குறித்த நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் காரில், நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் பயணம் மேற்கொண்ட கார், தும்கூர் அருகே குனிகல் பகுதியில் திடீரென சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதில் தமிழக பக்தர்களின் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அதில் பெங்களூரை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பகிரவும்...