கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்- அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டது.
நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலபுரகி நகரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 நாட்களில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எல்லையோர மாவட்டமான கலபுர்கியில் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.