கருத்து கணிப்புக்களில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை?
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள், நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஊடகங்களின் கருத்து கணிப்புக்களுக்கு அமைய பாரதீய ஜனதா கட்சியே முன்னிலையில் உள்ளது.
இந்தியாவின் 17வது நாடாளுமன்ற தேர்தல், 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக இடம்பெற்று, நேற்று இறுதி கட்ட வாக்குக்பதிவுகள் நிறைவடைந்தன.
இந்தநிலையில், இந்திய ஊடகங்களின் கணிப்பு முடிவுகளுக்குஅமைய, பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் 100 முதல் 140 வரையிலான தொகுதிகளையே கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.