கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல் திஷா ரவி கைது – கமல் கண்டனம்
கருத்துரிமைக்கு எதிரான கொடும்செயலே சமூக செயற்பாட்டாளர் திஷா ரவியின் கைது என மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்,
இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக் கருத்துக்களின் குரல் வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
பொது நலனுக்காகப் போராடும் போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி என்றும் கமல் ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் மாணவர்கள் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.