கருணாநிதி சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ வாசகம்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்கிடையே மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அதன்பின் அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அவரது உடல் வைக்கப்படும் சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !