கருணாநிதியின் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மரியாதை

புத்தாண்டை முன்னிட்டு மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதைச் செலுத்தியுள்ளார்.

மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் புத்தாண்டை முன்னிட்டு மலர்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை கலைஞரின் நினைவிடத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார். அவருடன் தி.மு.க பொருளாளர் துறைமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !