கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மேற்படி வலியுறுத்தினார்.

கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசிய திருச்சி சிவா, கருணாநிதியின் தன்னிகரற்ற திறமைகளை கௌரவிக்கும் வகையில், கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.

திருச்சி சிவாவின் கருத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு 11 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து அவர் கடந்த 7 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் உயிரழந்தார். இந்நிலையில் பல்வேறு இடையுறுகளை கடந்து அவரின் உடல் மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !